மக்களை அலற வைத்த ரவுடிகளுக்கு மாவு கட்டு.. போலீசார் அதிரடி!

 
பாலாஜி - நவீன்குமார் - ஸ்டீபன் ராஜ்

திருவண்ணாமலை ஜெய் பீம் நகர் மற்றும் சரண் பகுதியை சேர்ந்த பாலாஜி, நவீன் குமார், ஸ்டீபன் ராஜ் ஆகியோர் மீது தனித்தனியாக கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்களை ஆயுதங்களுடன் மிரட்டுவது, ரவுடித்தனம் செய்வது போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் அடிக்கடி ஈடுபடுவதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு புகார் வந்தது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஆயுதங்களுடன் பிறந்தநாளை கொண்டாடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அட்டூழியத்தை செய்தனர். இதையடுத்து, திருவண்ணாமலை நகர போலீஸார் தனிப்படை அமைத்து, பாலாஜி, நவீன்குமார், ஸ்டீபன் ராஜ் ஆகியோரை கைது செய்யச் சென்றபோது, போலீஸாரிடம் சிக்காமல் தப்பிச் சென்றனர்.

 தப்பி ஓடும்போது அவர்கள் கீழே விழுந்தனர். இதில் அவர்கள் கைகளில் எலும்பு முறிந்த நிலையில் இருந்த மூவரையும் கைது செய்த போலீஸார், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவு கட்டு கட்டி அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web