கொண்டாட்டங்களை விட உசுரு முக்கியம் பாஸ்.... பாதுகாப்பா கொண்டாடுங்க... என்னென்ன கட்டுப்பாடுகள்? எவற்றுக்கெல்லாம் தடை? முழு விபரம்!

 
புத்தாண்டு

பழையன கழிதலும், புதியன புகுதலுமாக இன்றுடன் 2024ம் வருடம் நிறைவு பெறுகிறது. புதுவருடத்தை வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் தயாராகி வருகின்றனர். கொண்டாட்டங்களை விட நமது பாதுகாப்பு ரொம்பவே முக்கியம். மறக்க முடியாத கொண்டாட்டமாக இருக்க வேண்டுமே தவிர, மறக்க நினைக்கிற நாளாக மாறி விடக் கூடாது. அதனால பாதுகாப்பாக கொண்டாடுங்க. அடுத்தவங்களுக்கும் இடைஞ்சலையும், சங்கடங்களையும் ஏற்படுத்தாதீங்க. 

இந்நிலையில் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து தெரிஞ்சுக்கோங்க. 

புத்தாண்டு

இன்று டிசம்பர் 31ம் தேதி மாலை 4 மணி முதலே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை கடற்கரை சாலைகளில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் மூலம் கடற்கரை, வழிபாட்டு தலங்கள் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனிக் கவனம் செலுத்தி பாதுகாப்பு அதிகரிக்க காவல் ஆணையாளர்  உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

முக்கிய சாலைகளில் வாகன நெரிசலை தடுத்தல், அதிவேகமாக செல்லும் வாகனங்களையும், இருசக்கர வாகன வேக பந்தயத்தில் ஈடுபடுவர்களையும் தடுத்து கண்காணிக்க கண்காணிப்பு சோதனை குழுக்களை அமைத்து விபத்தில்லா புத்தாண்டு கொண்டாடுவதற்கு காவல் துறை பணி சிறப்பாக செய்ய வேண்டும் உத்தரவிட்டுள்ளனர்.  எனவே பந்தயங்களில் ஈடுபடாதீங்க. வாகனங்களை ஓட்டி செல்லும் போது சாகசங்கள் வேண்டாமே. அடுத்தவங்க உசுரும் நமக்கு முக்கியம் தானே?

இன்று டிசம்பர் 31 மாலை முதலே பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை. கடற்கரையோரங்களில் உரிய தடுப்புகள் அமைத்து முன்னேற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மெரினா, சாந்தோம். எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை   கடற்கரை பகுதிகளில் காவல் ஆளிநர்கள். குதிரைப்படைகள்  மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தடை உத்தரவு நாளை வரை நீடிக்கும்.

புத்தாண்டு

அதே போல் கடற்கரை மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும். மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் உதவி மைய கூடாரங்கள் அமைத்தும், முக்கிய இடங்களில் டிரோன் கேமிராக்கள் மூலம் கண்காணித்து குற்றத் தடுப்பு நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படுகிறது.

கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம் மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளன. 

எச்சரிக்கை பதாகைகளும் பொருத்தப்பட்டு கடலில் யாரும் மூழ்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார்கள். மேலும், அவசர மருத்துவ உதவிக்கு. முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் வரவேற்க தயாராகுங்க.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web