யூடியூபர்களுக்கு கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள்... இனி இந்த வகை வீடியோக்களுக்கு காசு இல்லை!

 
யூடியூப்
 


 கையில் மொபைல் இருக்கும் ஒவ்வொருவருமே யூடியூபர்களாக மாறி வருகின்றனர். இதனால்  யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக மாறியுள்ளது. இதில் பலர் வீடியோக்கள் பதிவேற்றி, விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். தொடக்கத்தில் யார் வேண்டுமானாலும் வீடியோ போட்டு காசு பார்க்கலாம் .  இதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக சென்ற நிலையில்,  பிறகு, 1,000  சந்தாதாரர்கள் மற்றும் 4,000 மணிநேர பார்வைகள்  அல்லது 10 மில்லியன் ஷார்ட்ஸ் பார்வைகள்  போன்ற கண்டிஷன்கள் தற்போது நடைமுறையில் இருந்து வருகின்றன.  

யூடியூப்

இப்போது, 2025 ஜூலை 15 முதல் யூடியூப் ஒரு பெரிய “கிளீனிங்” ஆரம்பித்துள்ளது. இனி, உண்மையான, தனித்துவமான, தரமான வீடியோக்களுக்கு மட்டுமே மதிப்பு என அதிரடியான மாற்றங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.  யூடியூப், தரமற்ற, ஒரே மாதிரியான, அல்லது “காப்பி-பேஸ்ட்” வீடியோக்களை கட்டுப்படுத்த விரும்புகிறது. சிலர் செயற்கை நுண்ணறிவு மூலமாகவோ, மற்றவர்களின் வீடியோக்களை மறுபயன்படுத்தியோ, பயனற்ற வீடியோக்களை பெருமளவில் பதிவேற்றம் செய்கின்றனர்.  இவை  யூடியூபின் தரத்தை குறைக்கின்றன. இதனால், இனி இப்படியான வீடியோக்களுக்கு விளம்பரங்கள் மூலம் பணம்  கிடைக்காது. ஆனால், உண்மையாகவும், புதுமையாகவும், பயனுள்ள வீடியோக்கள் போடுபவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
 
AI மட்டும் வீடியோக்கள்: AI கருவிகளை வைத்து, உங்கள் பங்களிப்பு இல்லாமல், உரை-பேச்சு  குரல்களும், இணையத்தில் எடுக்கப்பட்ட படங்களும் உள்ள வீடியோக்கள். உதாரணமாக, “10 சிறந்த பயண இடங்கள்” என்று AI குரலில், இணைய படங்களுடன் வீடியோ செய்வது.  மற்றவர்களின் வீடியோ கிளிப்புகளை எடுத்து, எந்த மாற்றமும் இல்லாமல் அல்லது சிறு மாற்றங்களுடன் பதிவேற்றுவது இனிமேல் செய்யமுடியாது. ஒரே கதையை அல்லது ஸ்லைடுஷோவை சிறு மாற்றங்களுடன் பலமுறை பதிவேற்றுவது. உதாரணமாக, “5 சிறந்த மொபைல்கள்” என்று ஒரே உள்ளடக்கத்தை 10 வீடியோக்களாக பதிவேற்றுவது இனிமேல் செய்யமுடியாது.  உங்கள் வீடியோவில் உங்கள் சொந்த கருத்து அல்லது பொழுதுபோக்கு மதிப்பு இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு பாடலுக்கு ரியாக்ஷன் செய்யும்போது, உங்கள் முகத்துடன், “இந்த பாடல் எனக்கு ஏன் பிடித்தது என்கிற காரணத்தை ” என்று சொன்னால், அது பணமாக்கப்படும்.

யூடியூப்
AI குரலுடன், இணைய படங்களை வைத்து, “10 சிறந்த கார்கள்” என்று 20 ஒரே மாதிரி வீடியோக்கள் பதிவேற்றினால், பணமாக்குதல் நின்றுவிடும். அதைப்போல, ஒரு படத்தின் கிளிப்பை எடுத்து, உங்கள் முகத்துடன், “இந்த காட்சி ஏன் அருமையானது” என்று உங்கள் கருத்தை சொல்லலாம்.  
 சிலர் AI-ஐ வைத்து, மனித பங்களிப்பு இல்லாமல், தரமற்ற வீடியோக்களை பதிவேற்றி, பார்வைகளை மட்டும் நோக்கமாகக் கொள்கிறார்கள். இது யூடியூபின் தரத்தை குறைத்து விடுவதாக கூறப்படுகிறது, விளம்பரதாரர்களின் நம்பிக்கையை பாதிக்கிறது. உண்மையான, ஆர்வமுள்ள படைப்பாளர்களை ஊக்குவிக்கவும், பார்வையாளர்களுக்கு தரமான வீடியோக்களை கொடுக்கவும் யூடியூப் இந்த மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?