தமிழகம் முழுவதும் தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு... இளைஞர்கள் ஏமாற்றம் !!

 
பட்டாசு

நடப்பாண்டில்  தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இப்போதிருந்தே புத்தாடை பட்டாசு ஷாப்பிங்குகள் அதிகரித்து வருகின்றன. பல மாநிலங்களில் காற்று மாசுபாடு காரணமாக பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் முழுவதுவமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் பட்டாசு தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் உரிமையாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீபாவளி

இந்த தடையை நீக்குமாறும், தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதாகவும்  பட்டாசு தொழிலாளர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளே இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில் தற்போது தமிழகத்திலும் தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி

இந்த அறிவிப்பை தமிழக   சுற்றுச்சூழல்துறை அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம். அதிலும்  நீதிமன்ற உத்தரவுபடி தீபாவளி பண்டிகைக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். இதனை  உறுதி செய்யும் வகையில் தீபாவளி தினத்தில்   காற்றின் தரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web