மெரினாவில் நேரக்கட்டுப்பாடு... உயர்நீதிமன்றம் திடீர் உத்தரவு!

 
மெரினா

 மெரினா கடற்கரைக்கு செல்பவர்களை இரவு 10 மணிக்கு மேல் ரோந்து போலீசார் வீட்டிற்கு விரட்டி விடுவர் . அதற்கு மேலும் பொதுமக்களை அனுமதித்தால்  சட்டவிரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக சென்னை உயநீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சமூக ஆர்வலர் ஜலீல் உயர்நீதிமன்றத்தில்  கோடை வெப்பம் தணிக்க வருபவர்களை  மெரினாவில் இரவு 10 மணிக்கு மேல் இருக்கக் கூடாது என கூறி போலீஸ் அப்புறப்படுத்தி வருகிறது என பொதுநலவழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த மனுவின் மீதான விசாரணை இன்று  பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது.

உயர்நீதிமன்றம்

அதில்  இரவில் நேரக் கட்டுப்பாடு இன்றி பொதுமக்களை அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இரவு 10 மணிக்கு மேல் அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியராஜ் தெரிவித்தார். அத்துடன் சென்னை மாநகர காவல் சட்டம் 41ன்படி பொது இடங்களில் கூட நேரக் கட்டுப்பாடு விதிக்க அதிகாரம் உள்ளது எனவும்  போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  நீதிபதிகள், கோடை காலம் நிறைவடைந்துவிட்ட நிலையில் தற்போது  மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரர் கோரிக்கை மனுவை பரிசீலித்து காவல்துறை முடிவெடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web