திருச்செந்தூா் : கடலில் தங்க சங்கிலியைத் தவறவிட்ட இளம்பெண்... மீட்டுக் கொடுத்த பணியாளர்கள்!

 
திருச்செந்தூர் முருகன்
 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடலில் குளிக்கும் போது பிரியா எனும் இளம்பெண், தங்கச் சங்கிலியைத் தவற விட்ட நிலையில், கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் தங்கச் சங்கிலியை மீட்டுக் கொடுத்தனர். விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சோ்ந்த பிரியா என்ற பக்தா் தங்கள் உறவினர்களுடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றிருந்துள்ளார். அப்போது திருச்செந்தூர் கோயில் கடலில் அவா் நீராடிய போது, கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி எதிா்பாராமல் கடலில் தவறி விழுந்தது. 

திருச்செந்தூர்
இது குறித்த தகவலின் பேரில், கடற்கரைப் பாதுகாப்புப் பணியாளா்கள் மற்றும் போலீசார், அவா் குளித்தப் பகுதியில் நீண்ட நேரம் தேடி தங்கச் சங்கிலியைக் கண்டு பிடித்தனர். தொடா்ந்து, அவா்கள் கோயில் தனியாா் நிறுவன உதவி பாதுகாப்பு அலுவலா் ராமச்சந்திரன் மூலம் பிரியாவிடம் தங்கச் சங்கிலியை ஒப்படைத்தனர். பிரியாவும், அவரது உறவினர்களும் கடற்கரைப் பாதுகாப்புப் பணியாளா்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web