திமுக ஆன்மீக புரட்சிக்கு திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு ஒரு மைல் கல்... அமைச்சர் சேகர்பாபு!

 
சேகர்பாபு

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு ஜூலை 7ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  திமுக ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு ஒரு மைல்கல் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.
 
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.  செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் திட்ட பணிகளை ஆய்வு செய்தேன். 

இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். தமிழ் கடவுள் முருகனுக்கு திமுக ஆட்சியில் தொண்டு செய்தது போல் வேறு எந்த ஆட்சியிலும் செய்யப்பட்டதில்லை. முருகன் கோயில்களுக்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றுத் தரக்கூடிய ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. ஜூலை 14 ஆம் தேதி திருப்பரங்குன்றம் கோவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. 

ஸ்டாலின் சேகர்பாபு

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்குக்காக 3  இடங்களில்  தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான கழிப்பிடம், குடிநீர் வசதி மற்றும்  தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது என்றும் லட்சக்கணக்கான உணவுப் பொட்டலங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. பேருந்து நிலையங்களில் எல்இடி அகண்ட திரைகள் திரை மூலம் கோவில் குடமுழுக்கு நேரலையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. 

நாளை பிற்பகல் 12 மணியோடு திருச்செந்தூர் கோவில் நடை சாத்தப்படும், அதன் பிறகு குடமுழுக்கு நடந்த பிறகு பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கில் 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 25 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் கடற்கரையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு, கடற்கரைகளில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

சேகர்பாபு

பக்தர்கள் சோர்வடையாமல் இருக்க ஓ.ஆர்.எஸ் பானங்கள் வழங்கப்பட உள்ளது. இன்று முதல் கூடுதலாக 3 ஐஏஎஸ் அதிகாரிகள் திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு திருச்செந்தூர் கோவில் கூட முழுக்க ஒரு மைல் கல். முதலில் தன்னையும், தன்னை சார்ந்து இருக்கக்கூடிய இயக்கத்தையும் விஜய்யை பார்க்க சொல்லுங்கள். விஜய் போன்றோர் அறையில் இருந்து அறைகூவல் விடுவதை எங்கள் முதல்வர் லெஃப்ட் ஹேண்டில் டில் செய்வார்” என்றார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?