தைப் பொங்கல் திருநாள்... திருச்செந்தூர் கோயிலில் அதிகாலை ஒரு மணிக்கு நடை திறப்பு!

 
திருச்செந்தூர் கந்தசஷ்டி

 தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜன. 14ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

திருச்செந்தூர் முருகன்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தைப் பொங்கல் நாளான ஜன. 14ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் நடைபெறவுள்ளன.

திருச்செந்தூர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இக்கோயிலுக்கு பாதயாத்திரையாக வருவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மட்டுமன்றி விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்தும் விரதமிருந்து மாலையணிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்து வழிபட்டுச் செல்வதால் தினந்தோறும் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web