திருச்செந்தூர் கோயிலில் ஜனவரி 19ல் வருஷாபிஷேகம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகிற ஜனவரி 19ம் தேதி தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோயில் இணை ஆணையர் சு. ஞானசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவரான சுப்பிரமணியர் பிரதிஷ்டை தை உத்திர நட்சத்திர நாளில் நடைபெற்றது. அதன்படி, நிகழாண்டு வருஷாபிஷேகம் இம்மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு விமான கும்பாபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.
அன்றைய தினம் இரவில் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல் 7 மணிக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும். இரவில் சுவாமி குமர விடங்கப் பெருமான், தேவசேனா அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் வீதியுலா வருகின்றனர். புஷ்பாஞ்சலிக்காக அழகும், மணமுமுள்ள மலர்களை (கேந்திப்பூக்களைத் தவிர) அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு முன்பாக கோயிலின் உள்துறைக் கண்காணிப்பாளரிடம் பக்தர்கள் வழங்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!