திருச்செந்தூர் வள்ளி குகையில், 6 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி!

 
திருச்செந்தூர் வள்ளி குகை

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடு திருச்செந்தூர்.  தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்திற்காக மெகா திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வந்தது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. இதனை முதல்வர்  ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம்  திறந்து வைத்தார்.  

திருச்செந்தூர் கந்தசஷ்டி

90 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில்  ஜூலை 7ம்தேதி மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வள்ளி குகை திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் சுமார் 6 மாதங்களாக அங்கு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. 

திருச்செந்தூர்

திருப்பணி வேலைகள் முடிவுற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் வள்ளி குகைக்கு சென்று வழிபாடு செய்தனர். பின்னர் அங்குள்ள சந்தன மலையில் திருமணம் நடைபெற வேண்டியும், சில பக்தர்கள் குழந்தை வரம் வேண்டியும் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?