திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாண வைபவம்!! பரவசத்தில் பக்தர்கள்!!

 
திருஞானசம்பந்தர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் தர்மபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட திருவெண்ணீற்றுமையம்மை உடனாகிய சிவலோக தியாகராஜ சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் திருஞானசம்பந்தர் தனி சந்நிதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.நல்லூர் பெருமணம் என்று சொல்லக்கூடிய ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தருக்கும் தோத்திர பூரணாம்பிக்கைக்கும் பெரியோர்களின் ஆசிப்படி திருமண விழா நடைபெற்றது.

திருஞானசம்பந்தர்

அந்த திருமண விழாவில் தம்பதியர்கள் இருவரும் தீயில் புகுந்து அதாவது சிவஜோதியில் முக்தி அடைந்ததாக சிவபுராணம் தெரிவிக்கின்றது .  அதே நேரத்தில் திருமணம் காண வந்த அனைவரும் தீயில் கலந்து முக்தி அடைந்ததாக  வரலாறு. திருஞானசம்பந்த பெருமான் மனைவியுடன் திருமணம் காண வந்தவர்களுடன் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் சிவஜோதியில் கலந்து முக்தி அடைந்த ஐதீக நிகழ்வினை ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் நடத்தி வருகின்றனர். மேலும் திருஞான சம்பந்தர் திருக்கல்யாண நிகழ்வாக நடைபெறுகின்றது அதன் அடிப்படையில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாண விழா நடைபெற்றது.

s

திருஞானசம்பந்தர் பெருமான், தோத்திர பூரணாம்பிகைக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் மணமேடையில் எழுந்தருளினர். பக்தர்கள் அனைவரும் சீர்வரிசை கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் திருமண சீர்வரிசை எடுத்துக் கொண்டு கோவிலை வந்தடைந்ததும் திருமண சடங்குகள் தொடங்கப்பட்டன.  வேத விற்பன்னர்கள் திருமந்திரம் முழங்க சிறப்பு ஹோமம் நடைபெற்றது. அதன் பிறகு தோத்திர பூரணாம்பிக்கைக்கு சிவாச்சாரியார்கள் மங்களநாண் அணிவித்து திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது .இதில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு திருமணத்தை தரிசனம் செய்தனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web