திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 16ம் தேதி ஆனிவார ஆஸ்தானம்!

 
திருப்பதி திருமலை

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் வரும் ஜூலை 16ம் தேதி ஆனிவார ஆஸ்தானம் நடைபெற இருப்பதை முன்னிட்டு, ஜூலை 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி

இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர ஆனிவார ஆஸ்தானம் வருகிற 16ம் தேதி நடக்கிறது. அதையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி 15ம் தேதி நடக்கிறது. அதற்காக ஜூலை 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

திருப்பதி

எனவே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் முக்கியமான பிரமுகர்களை தவிர, வி.ஐ.பி. பிரேக் தரிசனங்களுக்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இதை கவனத்தில் கொண்டு பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?