திருப்பதியில் செப்.24ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் ஆரம்பம்!
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடத்தின் எல்லா நாட்களிலும் ஏதாவது ஒரு உற்சவம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் திருப்பதியில் நடைபெறும் பல்வேறு உற்சவங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி 9 நாட்கள் வரையில் நடைபெறும்.

இந்த பிரம்மோற்சவத்தில் மலையப்பசுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.அதன்படி நடப்பாண்டில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 24ம்தேதி தொடங்கி அக்டோபர் 2ம்தேதி வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி செப்டம்பர் 16ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். 23ம் தேதி மாலை அங்குரார்ப்பணம், விஷ்வசேனாதிபதி உற்சவம் நடைபெறும். செப்டம்பர் 24ம்தேதி மாலை 5.45 மணி முதல் 6.15 மணி வரை தங்க கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படும். இதைதொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் சுவாமி வீதியுலா நடைபெறும்.

முதல் நாளான 24ம் தேதி இரவு 9 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி வீதியுலா நடைபெறும். 9ம் நாளான 2ம்தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை திருமஞ்சனம் மற்றும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தேவஸ்தானம் சார்பில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
