திருப்பூர்: வாயில் காயங்களுடன் ஆண் புலி சடலம் மீட்பு!

 
புலி

உடுமலை அமராவதி வனச்சரகத்தில் புலி ஒன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tn

வாயில் காயங்களுடன் திருப்பூர் வனப்பகுதியில் ஆண் புலியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை அடுத்துள்ள அமராவதி வனச்சரகத்தில் 9 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று  உயிரிழந்தது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை மற்றும் அமராவதி அணை இரண்டு வனசரகங்கள் உள்ளன.  இங்கு புலி, சிறுத்தை, கரடி, யானை, மான்கள், காட்டுமாடு, அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.  

அமராவதி வன சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது  புலி ஒன்று வாயில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
23 நாட்களுக்கு பிறகு பிடிபட்ட மசின குடி புலி!

இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது ஒன்பது வயதுடைய ஆண் புலி என்பது தெரிய வந்தது.  புலியின் வாயில் காயங்கள் இருப்பதால் வேட்டையாடுபவர்களால் கொல்லப்பட்டதா? இயற்கையாக உயிரிழந்ததா என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  அத்துடன் புலியின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதிகாரிகள் இதற்கான இறுதி முடிவு எடுப்பார்கள்.  உடலில் காயங்கள் இல்லாமல் மர்மமான முறையில் உயிரிழந்த புலியின் உயிர் இழப்பிற்கு வனத்துறையினர் உடனடியாக தீர்வு காண வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web