திருவண்ணாமலை : கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினத்தன்று திருவண்ணாமலையைச் சுற்றிலும் நிலவொளியில் கிரிவலம் செல்வதை பக்தர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். நினைத்தாலே முக்தி தரும் தலமான திருவண்ணாமலையில், மலையையே சிவனாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலைச் சுற்றி மலைப் பாதையில் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் வலம் வருவதற்காக இந்த ஆனி மாத பெளர்ணமி கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இம்மாதம் 21ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7.46 மணி முதல் அடுத்த நாளான ஜூன் 22ம் தேதி சனிக்கிழமை காலை 7.21 மணி வரையில் பெளர்ணமி திதி இருக்கிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்தது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
