திருவண்ணாமலை : நீட் தேர்வில் 720/720 பெற்ற மாணவி... குவியும் வாழ்த்துக்கள்!

 
திருவண்ணாமலை : நீட் தேர்வில் 720/720 பெற்ற மாணவி... குவியும் வாழ்த்துக்கள்!

தமிழகத்தில் இந்த முறை நீட் தேர்வில் பல மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவி எம்.ஜெயந்தி பூர்வஜா நடந்து முடிந்த நீட் தேர்வில்  720/720 மதிப்பெண்கள் பெற்று இந்தியளவில் முதலிடம் பிடித்து சாதனைப் புரிந்துள்ளார். 


 

மாணவி ஜெயந்தி பூர்வஜாவின் வீட்டிற்கு பாஜக நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக அண்ணாமலை மாணவி ஜெயந்தி பூர்வஜாவை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். 

அவரது பதிவில், “இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவச் செல்வங்களுக்கும், எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய அளவில்,  தமிழகத்தைச் சேர்ந்த எட்டு மாணவச் செல்வங்கள் முதல் மதிப்பெண்ணை பெற்று, நமது மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 

திருவண்ணாமலை : நீட் தேர்வில் 720/720 பெற்ற மாணவி... குவியும் வாழ்த்துக்கள்!

நீட் தேர்வில் முதல் மதிப்பெண்ணான 720/720 பெற்றவர்களில் ஒருவரான, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவி, செல்வி ஜெயந்தி பூர்வஜா அவர்களை, இன்று தமிழக பாஜக திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவர் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து, அவரது கடின உழைப்பிற்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாக, ஸ்டெதஸ்கோப் ஒன்றைப் பரிசாக வழங்கி கௌரவித்தார். 

மனதில் உறுதியுடன் கடினமாக உழைத்தால்,  எண்ணிய இலக்கை நிச்சயம் எட்டலாம் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கும் அனைத்து மாணவ செல்வங்களுக்கும்,  மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web