நாளை குரூப் 4 தேர்வு... 6244 பணியிடங்களுக்கு 20லட்சம் பேர் போட்டா போட்டி!

 
டிஎன்பிஎஸ்சி

தமிழகம்  முழுவதும்  நாளை ஜூன் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பல்வேறு மையங்களில் குரூப்-4 எழுத்துத் தேர்வு  நடைபெற உள்ளது.  வி.ஏ.ஓ., வனக்காவலர் உட்பட  6,244 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 20 லட்சம் எழுதுகின்றனர். நாளை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது.  தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் சென்றுவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி
இதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 30ம் தேதி  முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை பெறப்பட்டன.குரூப்-4 தேர்வுக்கான அடிப்படை கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி  தேர்ச்சி என்றபோதிலும், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், எம்ஃபில் முடித்தவர்கள் என உயர்கல்வி தகுதி பெற்றவர்கள் உட்பட சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 2 வாரங்களுக்கு முன்பு ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி
குரூப் 4 தேர்வை பொறுத்தவரை  பொதுத் தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு மற்றும் நுண்ணறிவு திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள்.  டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்தபடி, குரூப்-4 தேர்வு முடிவுகள் வரும் 2025 ஜனவரி மாதம் வெளியிடப்பட உள்ளன. தற்போது 6,244 காலி இடங்களுக்கான தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 10000க்கும் மேல் அதிகரிக்கக் கூடும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குரூப்4 தேர்வை பொறுத்தவரை  நேர்காணல் கிடையாது.  எழுத்துத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் அரசு வேலை கிடைப்பது உறுதி . இதனால் எப்போதும் இத்தேர்வுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web