நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.... மாவட்ட கலெக்டர் திடீர் அறிவிப்பு!

 
விடுமுறை

 தமிழகத்தில் பொது மற்றும் அரசு விடுமுறைகள் தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள் , திருவிழாக்கள்  நடைபெறும் காலங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதுண்டு.  அந்த வகையில் கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா நாளை ஜூலை 12ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

கரூர் கடம்பவனேஸ்வரர்

இதனையடுத்து பள்ளிகளுக்கு  நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. கடம்பவனேஸ்வரர் கோயில் குடமுழுக்கில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

உள்ளூர் விடுமுறை

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த  உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜூலை 27ம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என கரூர் மாவட்ட  நிர்வாகம் அறிவித்துள்ளது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web