குரூப் 2, 2ஏ, 645 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு... டிஎன்பிஎஸ்சி!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வின் மூலம் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், தற்போது 645 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி சார்பதிவாளர், வனவர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவிகளுக்கான குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 645 பணியிடங்கள் குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இந்த தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 13 வரை டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்டம்பர் 18ம் தேதி இதற்கான முதல் நிலை தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
