நாளை TNPSC குரூப் 2 மற்றும் 2A பதவிகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு... இதையெல்லாம் செக் பண்ணிக்கோங்க!
நாளை ஆகஸ்ட் 29ம் தேதி முதல் குரூப் 2 மற்றும் 2A பதவிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளது. முதற்கட்ட கலந்தாய்வை அடுத்து மீதமுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில் ” ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்-II தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு 2ம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 29.08.2025-நாளன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எண்.3. தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்), சென்னை. 600 003-ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள்.
நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
