மீண்டும் தொடங்கியது சென்னை - சேலம் இடையேயான விமான சேவை!

 
சென்னை - சேலம் விமான சேவை
சென்னை - சேலம் இடையே விமான சேவை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

சுமார் 130 ஏக்கர் பரப்பளவில் சேலம் விமான நிலையம் அமைந்துள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் இங்கு விமான சேவை இயக்கப்பட்டு வந்தது. சென்னை - சேலம் இடையே 2018 ஆம் ஆண்டு விமான சேவை தொடங்கப்பட்டது.

Air service between Chennai and Salem resumed | சென்னை - சேலம் இடையே  மீண்டும் விமான சேவை தொடக்கம்

 கொரோனா காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் சென்னை- சேலம் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. சேலத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டதால், சேலம், தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

சென்னை - சேலம் இடையே விமான சேவை தொடக்கம்..!

இந்நிலையில் சென்னை - சேலம் இடையே விமான சேவை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. நாள்தோறும் சென்னையில் இருந்து காலை 11.30 மணிக்கும், சேலத்தில் இருந்து பகல் 1 மணிக்கும் இண்டிகோ விமானம் இயக்கப்படுகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

 

From around the web