இல்லத்தரசிகள் ஷாக்... புதிய உச்சம் தொட்ட தங்கம்!

 
gold actress

 மார்ச் மாத தொடக்கம் முதலே தங்கத்தின் விலை  ஏற்றத்துடன் இருந்து வருகிறது. திடீரென ஒரு நாள் வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்து புதிய உச்சம் தொட்டது.  அந்த வகையில் இன்றும் தங்கத்தின் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ55 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ6890க்கும், சவரனுக்கு ரூ440 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ54680க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ90க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ90000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

gold jewel actress sneha

இந்தியாவில் குறிப்பாக தமிழகம் தென்னிந்தியாவில் தங்கம் சுபநிகழ்வுகளில் பிரதமானமாக இருந்து வருகிறது. நடுத்தர வர்க்கத்தினரின் மிகப்பெரிய சேமிப்பு பெட்டகமாக தங்கம் திகழ்கிறது. குடும்ப நிகழ்ச்சிகள், பண்டிகைகளுக்கு தங்கம் வாங்குவது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  தங்கம்  ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக  இருந்து வருகிறது.

nayanthara gold jewels

மார்ச் மாதம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான் இஸ்ரேல் போரால் தங்கத்தின் விலை மேலும அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்திற்கு பிறகு புதிய உச்சம்தொட்டு வருகிறது. தங்கத்தின் மீதான முதலீடு உலகம் முழுவதும் அதிகரித்திருப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. தங்கத்தின் விலை  சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இவைகளின்  அடிப்படையில் தங்கம் விலை  நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web