தங்கம் அதிரடி உயர்வு... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்
 மே மாத தொடக்கம் முதலே தங்கத்தின் விலை தொடர் உச்சத்தை தொட்டு வருகிறது ஒரு நாள் குறைந்தாலும் அடுத்தநாளே இரட்டிப்பு அளவில் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி  தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,610க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.52,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று  தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி  ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.87.50க்கும், ஒரு கிலோ ரூ.87,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை அதிலும்  குறிப்பாக தமிழ்நாட்டில்  தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெற்று வருகிறது. தென்னிந்தியாவில்   குழந்தை பிறப்பது முதல் குடும்பத்தின் சுபநிகழ்வுகளுக்கு  தங்கம் வாங்குவது நமது வழக்கமாக இருந்து வருகிறது.   ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக தங்கம் இருந்து வருகிறது.   
பெண் குழந்தைகளுக்கு திருமணத்திற்கு  பல சவரன் நகையை அணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. அதே போல் அவசர மற்றும் ஆபத்து காலங்களில் அடகு வைக்கவும், உடனடி பணத் தேவைகளுக்கும் தங்க நகைகளே ஆபத்பாந்தவனாக இருந்து வருவதாக பெண்களின் நம்பிக்கை.  தங்க நகைகள் பயன்பாடும், தினசரி புழக்கத்தில்  இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தங்கம்


தங்கத்தின் மீதான முதலீட்டை கணக்கில் கொண்டு வர மத்திய அரசு  தங்க பத்திர முதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இருந்தபோதிலும், தங்கம் நகையாக விற்பனையாவது குறையவே இல்லை என்கின்றனர் தங்கநகை வியாபாரிகள்.  உக்ரைன், ரஷ்யா போர், கொரோனா காலம், இஸ்ரேல் காசா போர் நிலையற்ற தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது. பொருளாதாரச் சரிவிலிருந்து மீள நடுத்தர வர்க்கத்தினரின் ஒரே ஆதாரமாக இருப்பவை தங்க நகைகள் தான்.  கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web