அடேங்கப்....பா... ஒரே நாளில் ரூ14000 கோடிக்கு விற்பனை!

 
தங்கம்

 நேற்று அட்சய திருதியை கொண்டாடப்பட்ட நிலையில் அனைத்து நகைக்கடைகளிலும் அதிகாலை முதலே கூட்டம் அலைமோதியது. நேற்று மட்டும் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 3 முறை தங்கத்தின் விலை எகிறியது என்றாலும் நகைக்கடைகளில் தள்ளுமுள்ளுக்கு பஞ்சமே இல்லை. அட்சய திருதியை நாளில் பல நகைக்கடைகள் ஆபர்களை அள்ளி வழங்கியது.  ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.  நேற்று காலையிலேயே அனைத்து நகை கடைகளிலும் தோரணங்கள் மற்றும் வாழை மரங்கள் கட்டி வாடிக்கையாளர்களை  வரவேற்றனர்.

தங்கம்

 நகைக்கடைகள், ஒரு கிராம் தங்கம் வாங்கினால் ரூ.50 முதல் ரூ.100 வரை சிறப்புத் தள்ளுபடி, பழைய தங்கத்தை மாற்றி புதிய தங்கம் வாங்கினால் பழைய தங்கத்துக்கு கிராமுக்கு ரூ.50 கூடுதல் தொகை,  செய்கூலி, சேதாரம் தள்ளுபடி, வைர நகைகளுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி என பல சிறப்புத் திட்டங்கள் அமலில் இருந்தன.  
சென்னை மட்டுமல்லாமல் கோவை, திருச்சி, மதுரை என பல ஊர்களிலும் சிறிய நகைக்கடைகளில் கூட நள்ளிரவு வரை கூட்டம்  நீடித்தது.  இந்நிலையில்,  தமிழ்நாட்டில் உள்ள நகைக் கடைகளில் நேற்று ரூ.14,000 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனை செய்யப்பட்டு இருந்தாக நகைக்கடை  வியாபாரிகள் தெரிவித்தனா் 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web