புத்தாண்டில் அதிர்ச்சி... தங்கம் அதிரடி விலை உயர்வு!
இன்று புத்தாண்டு தினத்தில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ40 உயர்ந்துள்ளது இதனால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் அக்டோபர் 30ம் தேதி தங்கத்தின் விலை புதிய உச்சம் தொட்டு ஒரு சவரன் ரூ.59000ஐ கடந்தது.
அதனை தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.56,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய விலை நிலவரப்படி 2025 ஆண்டின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ 7150க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.57,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை எவ்வித மாற்றம் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ98000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!