மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

 
தங்கம்

 சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.400 குறைந்தும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.400 உயர்ந்தும், புதன்கிழமை சவரனுக்கு ரூ.480 குறைந்தும், வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.160 உயர்ந்தும், நேற்று சவரனுக்கு ரூ.440 உயர்ந்தும் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.72,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம்

இந்நிலையில்  வார இறுதிநாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 9,140க்கும்  சவரனுக்கு ரூ 520  உயர்ந்து ஒரு சவரன் 73,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி விலை ரூ 125  க்கும் கிலோவுக்கு ரூ5000 உயர்ந்து ஒரு கிலோ பார் வெள்ளி ரூ1,25,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?