வெள்ளிக்கிழமையில் அதிர்ச்சி... எகிறிய தங்கம் விலை!

 
தங்கம்

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் புத்தாண்டு தொடக்கம் முதலே உயர்வை சந்தித்து வருகிறது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

 இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ 80 உயர்ந்துள்ளது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  அதே நேரத்தில் தங்கத்தின் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7260க்கும், சவரனுக்கு ரூ 640 உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ  58,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம்

அதே போல் தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் வெள்ளி ரூ100க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ100000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!