தொடர் உச்சத்தில் தங்கம் விலை... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி !

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தபடி இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து பின்னர் கணிசமாக குறைகிறது.
அந்த வகையில் 14ம் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.9,320-ம், சவரனுக்கு ரூ.74,560 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் பின்னர் 21ம் தேதி முதல் தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்திருந்தது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,065-க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.72,520-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளீ ரூ120க்கும், ஒரு கிலோ பார்வெள்ளி ரூ120000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9,105-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.72,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!