சற்றே குறைந்த தங்கம் விலை.... நகைப்பிரியர்கள் ஆறுதல்!
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் சவரன் ரூ75000ஐ கடந்தது. இந்த வாரத்தை பொறுத்தவரை வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 680 ரூபாயும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு 160 ரூபாயும், நேற்று சவரனுக்கு 640 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.78,440-க்கு விற்பனையானது.

வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சமாக நேற்று தங்கம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

அந்த வகையில் இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.9,795-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.78,360-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை 2 வது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 137 ரூபாய்க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,37,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
