தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு... கிராம் ரூ10000 ஐ கடந்தது!

 
தங்கம்


சர்வதேச சந்தையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தில் தங்கம் விலை இருந்து வருகிறது.  அந்த வகையில் செப்டம்பர் 4ம் தேதி  வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்தது.

தங்கம்

அதன்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.78000ஐ தாண்டியது. நேற்று முன் தினம் சற்றே சரிந்தது.  அதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன்படி கிராமுக்கு ரூ70 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ9865க்கும்,  சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.78,920க்கும் விற்பனை செய்யப்பட்டது.  

நகை தங்கம் நகைக்கடை ஊழியர் சேல்ஸ் கேர்ள் பணிப்பெண்

இந்நிலையில், இதுவரை இல்லாத வகையில், வரலாற்றில் முதல் முறையாக ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்தை கடந்தது. இன்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ240 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10005க்கு, சவரனுக்கு ரூ1120 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?