மீண்டும் எகிறத் தொடங்கிய தங்கம் விலை... வெள்ளிக்கிழமையில் அதிர்ச்சி!

 
தங்கம்


சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.  ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10000ஐ  கடந்துள்ளதால் நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.  முன்பு எப்போதும் இல்லாத வகையில் 10 ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை 1,200 சதவீதம் உயர்ந்திருப்பதாக முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

தங்கம்


நேற்று செப்டம்பர் 18ம் தேதி   தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,220க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.81,760க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தொடர்ந்து 2 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது.

தங்கம் நகைக்கடை

அதன் படி இன்று செப்டம்பர் 19ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,230க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.81,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில்  வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி  ஒரு கிராம் வெள்ளி ரூ 143க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 1,43,000  க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?