ஒரே நாளில் 2 வது முறையாக உயர்ந்த தங்கம் ... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!
தங்கம் விலை கடந்த மாதம் 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்திலிருந்து குறைந்து, நவம்பர் 4-ந்தேதி ரூ.90 ஆயிரம் வரை சரிந்தது. அதன் பிறகு ஒரு வாரத்துக்கும் மேலாக விலை ஏற்ற, இறக்கத்துடன் நிலைத்திருந்த நிலையில், 10-ந்தேதி முதல் மீண்டும் உயரத் தொடங்கியது. 10, 11 தேதிகளில் தங்கம் சவரனுக்கு ரூ.3,200 வரை உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.1,760 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,800 ஆக இருந்த தங்கம், இன்று காலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.11,800 ஆகவும், சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.94,400 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பிற்பகலில் மீண்டும் விலை ஏறி, சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.95,200 ஆகவும், கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,900 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து இவ்வாறு ஏறி வரும் நிலையில் நகை வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தாலும், நகைபிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம், வெள்ளி விலையும் காலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.182 ஆனது. பிற்பகலில் மேலும் ரூ.1 அதிகரித்து, ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் என விலை உயர்ந்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
