தொடர் சரிவில் தங்கம் விலை... நகைப் பிரியர்கள் உற்சாகம்!
தங்கம் விலை கடந்த அக்டோபர் 17-ம் தேதி வரலாற்றிலேயே மிக உயர்வை எட்டியிருந்தது. அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.12,200, ஒரு சவரன் ரூ.97,600 என விற்பனை செய்யப்பட்டு புதிய உச்சமாக பதிவானது. பின்னர் விலை குறைவை நோக்கி திரும்பி, அக்டோபர் 28-ம் தேதி ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. அதன் பின்னர் ஏற்ற-இறக்கம் நீடிக்க, கடந்த 10-ம் தேதி முதல் தங்கம் மீண்டும் உயர்வை நோக்கி நகர்ந்தது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்வை பதிவு செய்ததால் தங்கம் மீண்டும் உச்சத்தை நோக்கி செல்வதா என சந்தையில் பேசப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு நேற்று விலை குறைந்தது. ஒரு கிராம் ரூ.11,900-க்கும், சவரன் ரூ.95,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.160, சவரனுக்கு ரூ.1,280 குறைந்தது. அதேபோல் வெள்ளியும் கிராமுக்கு ரூ.3, கிலோவுக்கு ரூ.3,000 குறைந்து விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் மீண்டும் சரிந்துள்ளது. சென்னை சந்தையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.11,550-க்கும், சவரன் ரூ.1,520 குறைந்து ரூ.92,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியும் கிராமுக்கு ரூ.5, கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிராம் ரூ.175, கிலோ ரூ.1,75,000 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
