இன்று தமிழகம் முழுவதும் விடுமுறை... உற்சாக கொண்டாட்டத்திற்கு ஓய்வு... !!

 
விடுமுறை

 நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை சிறப்பாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து சுமார் 12லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர். இவர்கள் பணிபுரியும் இடத்திற்கு திரும்பும் வகையிலும் பள்ளிப் பிள்ளைகளுக்கு ஓய்வு நாளாகவும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்

இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டது. அத்துடன் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1000 திட்டத்தில் மாதம் 15ம் தேதி  பணம் வழங்கப்பட்டு வந்தது. இதனை முன்னதாகவே கொடுக்க சொல்லி கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இதன் படி  நவம்பர் 10ம் தேதியே அவரவர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் நவம்பர் 13ம் தேதி ஓய்வு நாளாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மகளிர் உரிமைத் தொகை

அதன்படி நவம்பர் 13ம் தேதி திங்கட்கிழமையான இன்று தமிழகத்தில அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவின் படி இன்று  தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 18ம் தேதி  சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web