இன்று விடுமுறை... குவிந்த மக்கள்... களை கட்டுது மலர் கண்காட்சி..!

 
உள்ளூர் விடுமுறை

இன்று மே 19ம் தேதி, நீலகிரி மாவட்டத்திற்கு ஊட்டியில் மலர் கண்காட்சி துவங்குவதையடுத்து உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர். மலர் கண்காட்சியில் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கலந்து கொள்வதோடு, உள்ளூர் மக்களும் மலர்கண்காட்சியின் அழகை கண்டு ரசிக்கும் விதத்தில், இன்று நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ஊட்டி

சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நிலையில், தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில்  ஊட்டி மலர் கண்காட்சி இன்று மே19ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது.  

இன்று ஊட்டி மலை ரயில் ரத்து!

இதற்காக பிரம்மாண்ட மேடை, அரங்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.  இதனை முன்னிட்டு உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்குவதையடுத்து இன்று மே 19ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web