அட்சய திரிதியைக்கு தங்கம் வாங்கினீங்களா... மறக்காம இதைச் செய்துடுங்க!
நேற்று அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கினீங்களா? அப்போ மறக்காம இந்த விஷயத்தையும் செய்துடுங்க. இதில் நீங்க உங்களுக்கு வசதியானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இன்று காலையும் தொடர்கிறது அட்சய திருதியை. அட... அட்சய திருதியைக்கு தங்கம் கட்டாயம் வாங்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. அட்சய திருதியை தங்கத்திற்கான நாள் கிடையாது. அது மகாலட்சுமிக்கான நாள். எதைச் செய்தாலும், மன மகிழ்வோடு செய்யுங்க. தங்கம் வாங்கினால் தான் செல்வம் சேரும் என்பதில்லை. இதை எல்லாம் செய்தாலுமே வாழ்வில் செல்வம் சேரும். இன்று என்னென்ன செய்யலாம் என்று பார்ப்பதற்கு முன்பாக,
அட்சயம் என்பது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்.இந்த நாளில் தங்கம் வெள்ளி தான் வாங்க வேண்டும் என்பதில்லை. எந்த மங்களகரமான பொருள் வாங்கினாலும் பெருகும். அஷ்ட லட்சுமிகளின் கடாட்ஷமும் கிடைக்கும். அட்ஷய திருதியை அன்று தானியங்கள், உப்பு, மஞ்சள், விளக்கு, வெண்கல மணி, லட்சுமி படம், பணம், குங்குமச்சிமிழ், சந்தனம், சர்க்கரை என எது வேண்டுமானாலும் வாங்கலாம். யாரோ ஒரு நகை வியாபாரி கிளப்பி விட்ட புரளி, பெண்கள் நகைக்கடைகளில் கூட்டமாக நிற்கிறார்கள். அதை வைத்து அவர்களும் கல்லா கட்டுகிறார்கள்.
தங்கம் குருவையும், வெள்ளி சுக்கிரனையும் குறிக்கும். இவர்களின் அருள் நீடித்தால் வீட்டில் செல்வம் பல்கி பெருகும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. அட்சய திருதியை என்பது வாங்குவதற்கு மட்டுமல்ல, தானம் செய்வதற்கும் சிறந்த நாள். ஏழை , எளிய மக்களுக்கு நம்மால் இயன்றவரை இந்நாளில் தானம் செய்திட சுபிட்சமான வாழ்வு அமையும் என்பது ஐதிகம். செல்வத்தை அள்ளித்தரும் இந்த நன்னாளில் தானங்கள் செய்பவர்களுக்கு புண்ணியம் பல மடங்கு பெருகும்.
என்னென்ன தானம் வழங்கினால் என்னென்ன பலன்கள்?!
தண்ணீரை தானமாக வழங்கினால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு தண்ணீர் கொடுத்து தாகம் போக்கினால் இறையருளை பெறலாம்.
குங்குமத்தை தானமாக வழங்கினால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிட்டும்.
மஞ்சளை தானமாக வழங்கினால் தீர்க்க சுமங்கலி யோகம் பெறலாம்.
வெல்லம், நெய், உப்பு இவைகளை தானமாக வழங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
புத்தாடைகள் தானமாக கொடுத்தால் இறைவனின் ஆசியை பெறலாம்.
பால், தயிர் தானமாக வழங்கினால் செல்வ செழிப்பை பெறலாம்.
சந்தனத்தை தானமாக வழங்கினால் ஆரோக்கியமான வாழ்வை பெறலாம். இந்நாளில் குலதெய்வத்தை பிரார்த்தனைச் செய்து, இஷ்ட தெய்வத்தை வணங்கி இயன்ற அளவு தானம் செய்திட வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!