இன்று அமாவாசை... பித்ரு தோஷம் விலக வீட்டிலிருந்தபடியே எளிய பரிகாரம்!

 
அமாவாசை

இன்று தமிழகத்தில் வைகாசி அமாவாசை கடைப்பிடிக்கப்படுகிறது. அமாவாசை தினத்தில் அடிப்படையான சில விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி தவறாமல் கடைப்பிடித்து வந்தாலே பித்ரு தோஷங்கள் நம்மை விட்டு விலகி விடும். 

பித்ரு தோஷம் நீங்க வீட்டிலிருந்தே எளிய பரிகாரம்!

அமாவாசை தினங்களில், நீங்கள் ஊரில் இல்லாமல் இருந்தாலோ, அல்லது நீர் நிலைகளில் சமயங்களில் உங்களால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர முடியவில்லை என்றாலோ என்ன செய்வது என்ற குழப்பத்திலும், பித்ருக்களின் ஆன்மாக்கள் சாந்தி அடைய கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள் குறித்தும் பார்க்கலாம் வாங்க. 

அமாவாசை என்பது இந்து தர்மங்களின் படி பித்ருக்களுக்கு சாந்தியடைய செய்யும் விரத முறைகளில் மிக மிக முக்கியமான நாளாகும்.  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் அமாவாசை தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து, விரதத்தைத் தொடங்கி விட வேண்டும். காலையில் முழுவிரதம் இருந்து மனதில் வீட்டு பெரியோர்கள், முன்னோர்களை வணங்கி மதியம் சாப்பாடு தயாரித்து சூரியன் வந்ததும் படையலிட வேண்டும்.

பித்ரு தோஷம் நீங்க வீட்டிலிருந்தே எளிய பரிகாரம்!

மேலும் சாப்பிடுவதற்கு முன்பு பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கியும், காகங்களுக்கு சாதம் வைத்தும், ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்தும் விரதம் இருக்க வேண்டியது அவசியம். இதன் பிறகு கடவுளை வழிபட்டு மதியம் உணவு சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்யலாம். இதன் மூலம் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web