இன்று கூவாகத்தில் தேர்த்திருவிழா !!! ஆடிப்பாடி கும்மாளமிடும் திருநங்கைகள்!!

 
கூவாகம்

ஒவ்வொரு வருடமும் சித்திரைமாதத்தில் தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் கோலாகலமாக சித்திரை திருவிழா நடத்தப்படும். அந்த வகையில் நடப்பாண்டில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 17ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது.  தினமும் மகாபாரத சொற்பொழிவுகள் நடைபெற்று வந்த நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

கூவாகம்

இதில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் வருகை தந்துள்ளனர். இவர்கள்  அழகு பதுமைகளாக, தங்க நகைகளை அணிந்து வந்து கோயில் பூசாரி கையால் தாலி கட்டி கொண்டனர்.தொடர்ந்து கோயில் அருகில் கற்பூரம் ஏற்றி திருநங்கைகள் அரவாணின் பெருமைகளைப் பாடல்களாக பாடி உற்சாகமாக கும்மி அடித்து ஆடிப்பாடி வருகின்றனர். இவர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிப்பிடம், பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக  ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ட்ரோன் கேமரா மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

கூவாகம் திருவிழா
 முன்னதாக  திருநங்கைகளுக்கிடையே அழகிப் போட்டி நடைபெற்றது. அதில் சென்னை நிரஞ்சனா 2023 ம் ஆண்டுக்கான மிஸ் கூவாகம் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இன்று மாலை திருநங்கைகளின் முக்கிய திருவிழாவான கூத்தாண்டவர் கோவில் அரவானை கணவானக நினைத்து திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இன்று கூத்தாண்டவர் கோவிலில்  சித்திரை தேரோட்ட திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக கோவிலில் இருந்து அரவாண் சிரசு எடுத்துவரப்பட்டு கிராமங்களில் நகைகள், அரசிலை, பின்குடை , மாலைகள் என அலங்கார பொருட்கள் எடுத்து வந்து தேர்செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் பொதுமக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற தங்களது விவசாய நிலங்களில் விளைந்த விளைபொருட்களான மஞ்சள், கம்பு, மாங்காய்,முருங்கை  இவைகளை சூறைவிட்டு கூத்தாண்டவரை வழிபட்டு வருகின்றனர்.  கிராமத்தில் முக்கிய சாலைகளின் வழியாக கோலாகலமான வானவேடிக்கையுடன்  தேர் பந்தலடுக்கி செல்கிறது. அங்கு அரவாண் கலசமிடும் நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்  பிறகு அங்கு செல்லும் திருநங்கைகள் நேற்று இரவு கட்டிய தாலியை அறுத்தும் வளையல்களை உடைத்தும் பொட்டுகளை அழித்தும் ஒப்பாரிவைத்து அழுது சோகத்தை வெளிப்படுத்துவர். இறுதியில்  அருகில் உள்ள நீர்நிலைகளில் குளித்து விட்டு வெள்ளை புடவை உடுத்தி விதவை கோலம் பூண்டு சோகத்துடன் தங்களது வீட்டிற்கு செல்வார்கள். நாளை காலை விளையாட்டுநிகழ்ச்சி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவுபெறுகிறது . 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web