இன்று மரியம்பிச்சை நினைவு நாள்... திணறுது திருச்சி... பெரும்பிடுகு மன்னரால் மந்திரி ஆனாவர்கள்!

 
ஜெயலலிதா

திருச்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் பெரும்பான்மையாக  வாழும் ஒரு பிரிவினர் முத்தரையர்கள். இவர்களின் வாக்கு வங்கி கணிசமான அளவில் என்று சொல்வதை விட வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிப்பவர்களாகவே இருந்து வருகிறார்கள். அவர்கள் பெரிது விரும்பும் மாமன்னர் சதய விழா ஒவ்வொரு ஆண்டும் மே 23ம் தேதி சதயவிழாவாக கடைபிடிக்கப்படுவது வழக்கம். இந்த சமூகத்தினருக்கு ஆரம்ப காலத்தில் ஆதரவாக முதன்முதலில் செயல்பட ஆரம்பித்தவர் எம்.ஜி.ஆர் என்றாலும் இச்சமூகத்தினர் அனைத்து கட்சிகளிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் காலம் தொட்டு இன்று வரை இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மந்திரி சபையில் இல்லாமல் இருந்தது இல்லை என்றே சொல்லலாம். திமுகவில் இருந்த குழ.செல்லையா 1971 சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட கட்சியில் வாய்ப்பு அளிக்கப்படாததால் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  அதன் பின்னர், எம். ஜி. ஆர் அதிமுகவை தொடங்கிய போது, அதன் விண்ணப்பப் படிவத்தில் எம்ஜிஆர் முதலாவதாகவும், குழ. செல்லையா ஐந்தாவது நபராகவும் கையெழுத்திட்டனர். பின்னர் அதிமுக மாநில விவசாய பிரிவு செயலாளராக இருந்தார். 

இடையில் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தை தொடங்கி அதன் தலைவராகவும் செயல்பட்டார். முத்தரையர் இனத்தின் முதல் எம்.எல்.ஏ என்றும் சொல்லரசர் என்றும் அழைக்கப்பட்டார். பின்னர் எம்.ஜி.ஆர் மறைவிற்குப் பின் சங்கத்தின் செயல்பாடுகளில் நாட்டம் கொண்டு அரசியலில் ஈடுபாடு இல்லாமல் மறைந்தார். அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா பெரும்பிடுகு முத்திரையருக்கு திருச்சி மாநகரின் மத்தியில் சிலை வைத்து பெருமை சேர்த்ததோடு 1991ல் கு.ப.கிருஷ்ணனுக்கு மந்திரி சபையில் இடமளித்து அழகு பார்த்தார். அது நாள் முதல் தொடங்கி இன்று வரை அந்த சமூகத்தினர் இல்லாத மந்திரிசபை அமைந்தது இல்லை. அதே போல ஸ்ரீரங்கம் தொகுதியும் முத்தரையர் சமூகத்திற்கு என்றே இன்று வரை ஒதுக்கப்பட்டு வருகிறது. அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி.

எம்.ஜி.ஆர்.

கு.ப.கிருஷ்ணனுக்குப் பிறகு 1996ல் திமுக அரியணை ஏறியது. மருங்காபுரி தொகுதியில் வென்ற புலவர் செங்குட்டுவன் அமைச்சரானார். 2001ல் மீண்டும் அதிமுக ஆட்சியில் அமர கே.கே. பால சுப்பிரமணியன் அமைச்சராக்கப்பட்டு பின்னர் அவர் நீக்கப்பட்டு அண்ணாவிக்கு  மந்திரி பதவி வழங்கப்பட்டது. மீண்டும் 2006 தேர்தலில் திமுக வென்றாலும் முதல் மைனாரிட்டி அரசு என்னும் அவப்பெயருடன் ஆட்சி செய்தது.

மதிமுகவில் இருந்து மீண்டும் வந்த என்.செல்வராஜ் அமைச்சரானார். மீண்டும் 2011ம் ஆண்டு அதிமுக சார்பாக ஜெயலலிதா போட்டியிட்டு வென்று முதல்வரானார். ஆனாலும் முத்தரையர் இனத்தைச் சார்ந்த சிவபதி அமைச்சராக்கப்பட்டார். பின்னர் அவர் நீக்கப்பட்டு பூனாட்சி மந்திரி ஆக்கப்பட்டார். ஒருமுறை ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்படுவதில்லை என்ற சரித்திர சாதனையை நிகழ்த்தியது. 2016ல் அதிமுக அந்த பழிச்சொல்லை தகர்த்தது. அமைச்சரவையில் வளர்மதி இடம் பெற்றார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வர தற்பொழுது அச்சமூகத்தின் மந்திரியாக மெய்யநாதன் இருக்கிறார்.

அமைச்சர்கள்

அப்படிப்பட்ட சமூகத்தின் மாமன்னரின் சதய நாள் விழா இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. காலையில் முதன் முதலில் அரசு சார்பாக முதல் மரியாதையை ஆட்சியர் செய்ய பின்னர் அமைச்சர் பெருமக்கள் மரியாதை செய்வார்கள். அதன் பின்னர் அனைத்துக் கட்சி பிரமுகர்களுக்கும் நேரம் வழங்கப்பட்டு மரியாதை செலுத்துகிறார்கள். திருச்சி விழாக்கோலம் பூண்டுள்ளது. அதே போல 1991 முதல் இன்று வரை முத்தரையர் சமூகத்தை சேர்தவர்களே ஸ்ரீரங்கம் தொகுதியில் எம்.எல்.ஏக்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

1991ல் கு.ப.கிருஷ்ணன்
1996ல் தி.ப. மாயவன் 
2001ல் கே.கே. பால சுப்பிரணியன்
2006ல் மு. பரஞ்சோதி
2011ல் ஜெ. ஜெயலலிதா
2016ல் வளர்மதி
2021ல் எம்.பழனியாண்டி

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web