இன்று அன்னையர் தினம்... இதை எல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

 
அன்னையர் தினம்

இந்த விஷயங்களைத் தெரிஞ்சுக்கோங்க... அதன் பிறகு உங்களுடைய அம்மாவுக்கு வாழ்த்துக்களை மறக்காம சொல்லிடுங்க... இன்று உலகம் முழுவதுமே அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் ஒருவருக்கு முதன்முதலில் அறிமுகமாகும் உறவு அம்மா தானே? அம்மா… என்கிற வார்த்தைகளில் தானே நம் எல்லோருடைய வாழ்வும் துவங்குகிறது… ஒவ்வொருவரின் மூச்சும் நிஜத்தில் அந்த மூன்றெழுத்துக்களில் தானே அடங்கியிருக்கிறது

அந்த வார்த்தைக்கும், உறவுக்கும் எதுவும் ஈடாகாது. அந்த உத்தம உறவின் தியாகங்களை நினைவு கூற, ஒருசில நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டாலும் பொதுவாக ஒவ்வொரு வருடமும் மேமாதம் வருகின்ற இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையே அன்னையர் தினமாக கொள்ளப்படுகிறது.

ஆனால் இன்று கொண்டாடி மகிழும் அன்னையர் தினத்தை, அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த அன்னா ஜார்விஸ் என்பவர் தான் முதன்முதலில் துவக்கி வைத்து வழிகாட்டியவர். அன்னா ஜார்விஸ் திருமணமானவரோ, பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல. அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதால், இவரை மையப்படுத்தி தான் அன்னையர் தினமே உருவாக்கப்பட்டது.

இனியாவது  தாய்மையை போற்றுவோம்!அன்னையர் தின வாழ்த்துக்கள்!

தனது அன்னையைப் பாராட்டி, சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இவர். சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ், ஏதாவது ஒரு நாளிலாவது எல்லோரும் தங்களது தாயை, அவளது தியாகத்தை, நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்காக அவர் கடுமையாக உழைத்தார். சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அன்னாவும் அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களுக்கு நேரடியாக கடிதங்களை எழுதி அன்னையர் தினத்திற்கு பெரும் ஆதரவு திரட்டினர். இதன் காரணமாக 1911ஆம் ஆண்டு அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட முழக்கங்களின் வாயிலாக 1914ம் ஆண்டு மே 8ம் தேதி அதிபர் உட்ரோவ் வில்சன் கூட்டறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டார். அதன்படி ஒவ்வொரு வருஷமும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். 

இனியாவது  தாய்மையை போற்றுவோம்!அன்னையர் தின வாழ்த்துக்கள்!

பண்டைய கிரீஸ் நாட்டில், ‘ரியா’ என்ற கடவுளைத் தாயாகக் கருதி வழிபாடு நடத்தி வந்தனர். ரோமிலும் ’சிபெல்லா’ என்ற பெண் கடவுளை அன்னையாக தொழுது வந்தனர். அமெரிக்காவை பின்பற்றி இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகள், மே 2வது ஞாயிறு அன்று இத்தினத்தை கொண்டாடுகின்றன. சிறந்த சமுதாயத்தை உருவாக்க, அன்னையரின் பங்களிப்பு முக்கியம். ’எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்ற பாடல் வரிக்கு ஏற்ப, சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான். 

இன்றைய தினம் வாட்ஸ் -அப்பில் ஸ்டேடஸ் வைத்து மகிழ்ந்து கொண்டிருக்காமல், உங்களைப் பெற்றெடுத்த தாய் மீது உண்மையான அக்கறைக் காட்டுங்கள். இன்று முடிந்தால் நேரில் அன்னையருக்கு வாழ்த்துக்களைக் கூறி, உங்களுடைய செல்போனை ஆஃப் செய்து, இன்று முழுவதும் அவருடன் நேரத்தை செலவிடுங்கள். பெற்றோர்கள் உங்களிடம் கேட்பதெல்லாம் உங்களுடைய நேரத்தையும், அன்பையும் தான். அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெற மறவாதீர். தாயின் அன்பு, நம் ஆயுளுக்கும் பாதுகாக்கும் கவசத்தைப் போன்றது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web