இன்று சனிஜெயந்தி... இந்த 5 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும்.. பயன்படுத்திக்கோங்க!

 
சனி சனிப்பெயர்ச்சி திருநள்ளாறு

இன்று சனி ஜெயந்தி. நீங்க தவறு செய்யவில்லை என்றால், அடுத்தவரைப் பார்த்து பொறாமைப்படவில்லை எனில், உங்கள் வளர்ச்சியை  மட்டுமே நினைத்து, உண்மையாக உழைத்து வந்தால், சனீஸ்வரரைப் போன்று கொடுப்பவர்கள் யாருமே கிடையாது. அப்படியான தர்மவான் அவதரித்த தினம் இன்று. நம்மில் பலருக்கும் சனீஸ்வரர் பெயரைக் கேட்டாலே பயம் தான். ஆனால், அப்படியெல்லாம் பயப்படத் தேவையில்லை. கடமையைச் சரியாக செய்யாதவர்கள், சோம்பேறிகளாய் திரிபவர்களுக்கு தண்டனைக் கொடுத்து, அவர்களை நேர்வழிப் படுத்துபவர் சனி. அவர் தர்மதேவன். நமது பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நமக்கானதை சரியாக கொடுப்பார். நவக்கிரகங்களில் எந்த கிரகத்திற்கும் இல்லாத அடைமொழியாக ஈஸ்வரர் பட்டத்துடன் சனீஸ்வரனாக திகழ்கிறார். சனியை போல் கொடுப்பார் இல்லை. சங்கடங்கள் தீர்க்கும் சனி பகவான் என்பதெல்லாம் ஜோதிட மொழி.  சனிபகவான் அவதரித்த தினம் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.  சனி பகவான் ஒரு நபரின் நல்ல மற்றும் கெட்ட செயல்களை கணக்கிட்டு அதற்கேற்ப கர்மபலனை தருகிறார்.

ராசிபலன் சனி

சனிபகவானின் கடாட்சத்துடன் தான் ஒருவர் தன் வாழ்வில் அமைதியையும், சந்தோஷத்தையும் பெறமுடியும்.  அதே நேரத்தில் தான் சனிபகவானின்  கோபம் அந்த நபரின் வாழ்க்கையில் நெருக்கடியை ஏற்படுத்தி நிம்மதியை குலைக்கிறது. சனிபகவான்  வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் அவதரித்ததாக ஜோதிட சாஸ்திரம்  தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் சனிஜெயந்தி வைகாசி அமாவாவையில் கொண்டாடப்படுகிறது.  அந்தவகையில் நடப்பாண்டு  சனி ஜெயந்தி  மே 19 ம் தேதி கொண்டாடப்படுகிறது. அமாவாசை திதியானது மே 18 ம் தேதி இரவு 09.42 மணி முதல்  மே 19 ம் தேதி இரவு 09.22 வரை நீடிக்கிறது.  இந்த நேரத்தில்  சனிபகவானை பிரார்த்தனை செய்து  வழிபாடு செய்திட  சனி பகவானின் அருளை பெறலாம்.  இந்த சனி ஜெயந்திக்கு  ஐஸ்வர்யம், பணமழையை பெறப்போகிறார்கள் 5 ராசிக்காரர்கள். 

ரிஷப ராசி:

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் மற்றும் சனிபகவான்.  அதனால்தான் ரிஷபம் ராசிக்காரர்களிடம் சனிபகவானுக்கு  எப்போதும் கருணை  உண்டு. இவர்கள் சனிஜெயந்தியால் சுப பலன்களை பெறுவார்கள். செல்வம், பதவி, மரியாதை எல்லாம் பெறுவார்கள். 

கடக ராசி:

கடக ராசிக்காரர்களுக்கு முக்கிய வேலைகள் முடிவடையும், புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.  பணம் பல வழிகளில் வந்து சேரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

துலாம் ராசி:

துலாம் ராசிக்காரர்களுக்கு  சனிஜெயந்திக்கு சிறப்பான பலன்களை பெறுவர். இவர்கள் இயலாதவர்களுக்கு உணவு அளிப்பதன் மூலமும் விலங்குகளிடம் கருணை காட்டுதல் மூலம் கூடுதல் பலன்களை பெறலாம். சனிபகவானின்  அருளால் எடுத்த காரியம் கைகூடும்.  வெற்றி, பணம், புகழ் மற்றும் உற்சாகம் பெறலாம். 

மகர ராசி:

மகர ராசிக்காரர்களுக்கு ராசிக்கான  அதிபதியான சனிபகவான். இவர்கள் சனியின் தாக்கத்தால்  திறமைகள் வெளிப்படும். பதவி உயர்வு ,பாராட்டுக்கள் நிச்சயம். தொழிலில் முன்னேற்றம் பெறலாம்.  

சனி பகவான்

கும்ப ராசி: 

கும்ப ராசிக்காரர்களுக்கு அதிபதி சனிபகவான். இவர்கள் சனி ஜெயந்தியால் ஆரோக்கியம் பெறுவார்கள். எடுத்த காரியத்தில் வெற்றி பெறலாம். தொழிலில் லாபம், ஐஸ்வர்யம் பணமழை பொழியப்போகிறது. கடின உழைப்பு, அன்பு, மரியாதை இவைகளால் சிறப்பான  பலனைப் பெறுவீர்கள்.

சனிபகவான் ஜெயந்தி அதாவது வைகாசி அமாவாசை தினத்தில் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று சனிபகவானை பிரார்த்தனை செய்து  அரச மரத்தடியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.”ஓம் ஸம் சனீஸ்வராய நமக" என்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web