நாளை ஆவணி அமாவாசை... சதுரகிரியில் குவியும் பக்தர்கள்!
ஆவணி மாத பிரதோஷம், அமாவாசை தினங்களை முன்னிட்டு சதுரகிரியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் அதிகளவில் ஆவணி பிரதோஷ பூஜைக்கு குவிந்தனர். இன்று மாலை சுந்தர மகாலிங்கம் சாமிக்கு சிவராத்திரிக்கான அபிஷேகம் நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் அமாவாசை விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இந்தாண்டு ஆவணி அமாவாசை விழா நாளை 22ம் தேதி நடைபெறுகிறது. நேற்று ஆகஸ்ட் 20ம் தேதி பிரதோஷ தினத்தை முன்னிட்டும், ஆவணி அமாவாசையை முன்னிட்டும் நாளை ஆகஸ்ட் 22ம் தேதி வரை கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நேற்றிரவு முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

நேற்று காலை 5.45 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு, தீவிர சோதனைக்குப் பிறகு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். நேற்று மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் பிரதோஷ பூஜை நடைபெற்றது.
அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று சிவராத்திரி, நாளை 22ம் தேதி அமாவாசை திதி இருப்பதால் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
