இன்று முதல் காலாண்டு விடுமுறை... சிறப்பு வகுப்புக்கள் நடத்தக தடை ... பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு!
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் செப்டம்பர் 19ம் தேதி முதல் காலாண்டு தேர்வு தொடங்கி நேற்று செப்டம்பர் 27 வரை நடத்தப்பட்டது. முதலில் காலாண்டு விடுமுறை 5 நாட்கள் மட்டும் விடப்பட்ட நிலையில் அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் விடுத்த வேண்டுகோளின் படி காலாண்டு விடுமுறையை பள்ளிக் கல்வித்துறை நீட்டித்தது. அதன்படி, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்படுவதாகவும், 7ம் தேதி திங்கட்கிழமை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகளை திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் புதிய உத்தரவின்படி, 9 நாட்கள் காலாண்டு விடுமுறை இன்று செப்டம்பர் 28 சனிக்கிழமை முதல் தொடங்குகிறது. மீண்டும் பள்ளிகள் அக்டோபர் 7ம் தேதி திறக்கப்பட உள்ளது. வழக்கமாக தொடர் விடுமுறை, காலாண்டு, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!