இன்று கடைசி தேதி... 10,11ம் வகுப்பு மாணவர்கள் துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

 
தேர்வு முடிவுகள்

இன்று மே 27ம் தேதி 10 மற்றும்11ம் வகுப்பு மாணவர்கள் துணைத் தேர்வுகளை எழுதுவதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரை துணைத் தேர்வுகளை எழுத விண்ணப்பிக்காதவர்கள் மறக்காம உடனடியா விண்ணப்பிச்சுடுங்க. தமிழகத்தில் கடந்த 19ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வில் குறைவான மதிப்பெண்  பெற்றவர்கள், தேர்ச்சியடையாதவர்கள் மீண்டும் ஒரு முறை முயற்சிக்கலாம். உடனடியாக துணைத் தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம். 

துணைத்தேர்வு

கடந்த ஆண்டு 90.7% மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில், நடப்பாண்டில்  மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.66%, மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.16%.  தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம்  முதலிடத்திலும், சிவகங்கை மாவட்டம் 2ம் இடத்திலும், விருதுநகர் மாவட்டம் 3 ம் இடத்தையும் பிடித்துள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23,971 மாணவ-மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர்.  இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு எழுத துணைத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த துணை தேர்வில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள்  உடனடியாக தாங்கள் படித்த பள்ளிகள் அல்லது  தேர்வு மையத்தை அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.

துணைத்தேர்வு அட்டவணை

ஜூன் 27 – மொழிப்பாடம். 
ஜூன் 28 – ஆங்கிலம்
ஜூன் 30 – கணிதம்
ஜூலை 1 – விருப்பத்தேர்வு மொழிபாடம்
ஜூலை 3 – அறிவியல்
ஜூலை 4 – சமூக அறிவியல்

தேர்வு

10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு மே 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், மறுகூட்டல், மறு மதிப்பீட்டிற்கு இன்று மே 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு  மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5ம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத் தேர்லை 7.70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர். 11ம் தேர்வு தேர்ச்சியடையாத மாணவர்களும் துணைத் தேர்வு எழுத இன்று விண்ணப்பிக்கலாம். இன்றுடன் கால அவகாசம் நிறைவடைகிறது. 

இதையும் படிச்சு பாருங்க...  ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! வீடியோ!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web