இன்று கடைசி தேதி... மறந்துடாதீங்க... ITR ரிட்டர்ன் ஃபைல் பண்ணிடுங்க... காலக்கெடு நீட்டிப்பு கிடையாது!

 
வருமான வரி

இன்று ஜூலை 31ம் தேதியுடன் வருமான வரிக் கணக்கை செலுத்துவதற்கான காலக்கெடு நிறைவடைகிறது. இது வரை காலகெடு நீட்டிப்பதற்கான எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. உடனே உங்கள் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்துடுங்க.

வருமான. வரி செலுத்துபவர்கள் கடைசி  தருணம் வரை தாமதிக்கக் கூடாது. ITR ஐ முன்கூட்டியே தாக்கல் செய்வது நல்லது. மார்ச் மாதத்தோடு ஆண்டு இறுதிக் கணக்கு முடிவடைந்த நிலையில் 2023-2024 ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறை உத்தரவு பிறப்பிக்கும் எனக் கூறியிருந்தது.  அதன்படி ஒவ்வொரு வருடமும் ஜூலை 31ம் தேதி காலக்கெடுவை நிர்ணயிப்பது வழக்கம்.

tax சொத்து நில வரி காலி மனை

இந்தியா முழுவதும்  இன்று ஜூலை 31ம் தேதியுடன் வருமான வரி கணக்கு  தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நிறைவடைகிறது. இன்று வருமான வரிக்கணக்கை சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு அபராதத்துடன் கூடிய  ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதன்படி 31 டிசம்பர் 2024 வரை வருமான வரிக்கணக்கை அபராதத்துடன் தாக்கல் செய்யலாம். அதனையும் கடந்து வருமான வரியை தாக்கல் செய்யவில்லை எனில் அது தானாகவே புதிய வரி விதிப்பு முறைக்கு மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி

ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரியைத்  தாக்கல் செய்யத் தவறினால் வருமான வரிச் சட்டம் 234F பிரிவின்படி, தாமதமாகத் தாக்கல் செய்வதற்கான கட்டணம் ரூ5000  விதிக்கப்படும். இதே போல உங்கள் வருமானம் ரூ5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால், வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்வதற்கான கட்டணம் ரூ1,000 ஆகும். கூடுதலாக, நிலுவையில் உள்ள வரித் தொகைக்கு மாதத்திற்கு 1% வட்டி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி

From around the web