இன்று கடைசி தேதி... மிஸ் பண்ணாதீங்க... ரூ.62,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

 
மத்திய அரசு வேலை

மாதந்தோறும் ரூ.65,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி என்பதால் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. உடனே அப்ளை பண்ணுங்க. மத்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் சால்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 15 பணியிடங்களுக்கு திறமையும், தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று நவம்பர் 5ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் சால்ட்ஸ் லிமிடெட்டானது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது மேலாளர், கூடுதல் பொது மேலாளர், துணை பொது மேலாளர், தலைமை மேலாளர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கென 15 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 28 முதல் 52 ஆக இருக்க வேண்டும். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கல்வித் தகுதி: விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலை கழகத்தில் பணி சார்ந்த துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊதியம்: பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,100/- முதல் ரூ.62,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கை

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web