இன்று கடைசி தேதி... தேசிய சுகாதாரத் திட்டத்தில் வேலை வாய்ப்பு... முழு விபரம்!

இன்று ஜூலை 4ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைத் தவற விடாதீங்க. தேசிய சுகாதாரத் திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டங்களில், நாமக்கல் மாவட்டத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த காலி பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான தகவலில் கீழ்க்கண்ட பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதன்படி பணி: ஆடியோலஜிஸ்ட் மற்றும் பேச்சு சிகிச்சையாளர்
காலி பணியிடம் : 1
சம்பளம் : மாதம் ரூ.23,000
தகுதி: பேச்சு மற்றும் மொழி நோயியல் பிரிவில் இளநிலை பட்டம்
வயதுவரம்பு : 40-க்குள்
பணி: சிகிச்சை உதவியாளர் (பெண்)
சம்பளம் : மாதம் ரூ.13,000
தகுதி: தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் டிப்ளமோ நர்சிங் தெரபிஸ்ட் படிப்பில் தேர்ச்சி
வயதுவரம்பு: 59-க்குள்
பணி: இடைநிலை சுகாதாரப் பணியாளர்
காலியிடங்கள் : 23
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: செவிலியர் பட்டய படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம்
வயதுவரம்பு: 50க்குள்
பணி: பல்நோக்கு சுகாதாரப் பணியாளர், சுகாதார ஆய்வாளர்
காலியிடங்கள்: 12
சம்பளம் : மாதம் ரூ.14,000
தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சி பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி சான்றிதழ்
வயதுவரம்பு : 40 க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: www.namakkal.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் சுயசான்றொப்பம் செய்யப்பட்ட தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து நேரிலோ அல்லது விரைவுத் தபால் மூலமாகவோ அனுப்பலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட சுகாதார அலுவலர்,
நிர்வாக செயலாளர்,
மாவட்ட நல வாழ்வு சங்கம் ,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
நாமக்கல் மாவட்டம் - 637 003.
தொலைபேசி எண்: 04286281424.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 4.7.2025 மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!