இன்றே கடைசி... மிஸ் பண்ணாதீங்க... தமிழகத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்!

 
நாசா
முதல் நாளில் இருந்த ஆர்வம் அதன் பின்னர் நம் மக்களிடையே இல்லை. வானியல் ஆய்வாளர்கள், மாணவர்களுக்கு இது அரிய வாய்ப்பு. தமிழகத்தில் இன்று இரவு வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை வானில் வெறும் கண்களால் பார்த்து மகிழலாம் என  நாசா தெரிவித்துள்ளது. மிஸ் பண்ணாம இதைப் பாருங்க. உங்கள் பிள்ளைகளுக்கும் இது பற்றி எடுத்துக் கூறுங்க. விண்வெளியில் நாசா உடன் இணைந்து பல்வேறு நாடுகள் அமைத்துள்ள இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் 13 முறை பூமியை சுற்றி வருகிறது. மணிக்கு 28000  கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த மையத்தில், விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை சென்னையில் இருந்து வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா  அறிவித்திருந்தது.

நாசா

நாசா அறிவித்திருந்தப்படியே முதல் நாளில் இரவு 7.09 மணி முதல் வெறும் கண்களால் 7 நிமிடங்களுக்கு வானில் இன்னொரு நட்சத்திரம் போலவே விண்வெளி ஆய்வு மையம் தெரிந்தது. ஏராளமான மக்களும், வானியல் அறிஞர்களும், மாணவர்களும் இதனை  வெறும் கண்களால் பார்த்து ரசித்தனர். வானத்தில் வெளிச்ச புள்ளியாகவும், சற்று நீண்ட கோடாகவும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை பார்க்க முடிந்ததாகக் கூறினார்.  சென்னையின் பல இடங்களில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் கடந்து செல்வதை மக்கள் பார்த்து ரசித்தனர்.

நாசா
கோவையில் இருந்து சென்னை வரை இருக்கும் மாவட்ட மக்கள் இன்று மே 14ம் தேதி வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பார்க்கலாம் என நாசா அறிவித்துள்ளது. கோவை, உதகை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, விழுப்புரம் மக்கள் வெறும் கண்ணால் விண்வெளி மையத்தை பார்க்கலாம் இன்று மே14ம் தேதி வரை விண்வெளி மையத்தை காணலாம் என நாசா தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web