இன்று கடைசி ஆட்டம்... தொடரை முழுமையாக கைப்பற்றுமா தென்னாப்பிரிக்கா?!
ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெக்காய் நகரில் இன்று நடைபெற உள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக தென்னாப்பிரிக்கா கைப்பற்றுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் 98 ரன் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் 84 ரன் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் இன்று 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது.

ஏற்கெனவே தென்னாப்பிரிக்காவிடம் தொடரை இழந்து விட்ட ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றிக்காக கடுமையாக போராடும். அதே சமயம் தொடரை முழுமையாக கைப்பற்ற தென்ஆப்பிரிக்க அணி ஆர்வம் காட்டும். வலுவான இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
