இன்று அதிர்ஷ்டம் தரும் ஆடி தேய்பிறை பிரதோஷம்... இப்படி வழிபாடு செய்து பாருங்க!

 
வில்வம் சிவன் சிவபெருமான் பிரதோஷம்

இன்று அதிர்ஷ்டம் தரும் ஆடி மாத தேய்பிறை பிரதோஷம். இந்த பிரதோஷ தினத்தில் மறக்காம இப்படி வழிபாடு செய்து பாருங்க. உங்களுடைய செல்வ நிலை உயர்வதை உணர்வீங்க. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை, வளர்பிறை என இரு முறை பிரதோஷ தினங்கள் வருகின்றன. எல்லா பிரதோஷங்களுமே சிறப்பானவை தான் என்றாலும் சனிக்கிழமைகளைப் போலவே வியாழக்கிழமை வருகிற பிரதோஷ தினங்களும் விசேஷமானவை.

வியாழக்கிழமையன்று வருகிற பிரதோஷத்தின் சிறப்பை பார்க்கலாம் வாங்க. ஒவ்வொரு மனிதனின்  பிறவி தோஷங்களைப் போக்குகிற தினம் தான் பிரதோஷ தினம். பிரதோஷ நாள் மட்டுமல்ல எல்லா  நாட்களிலும், நேரங்களிலும் சிவபெருமானை வழிபடுவதற்கும் இந்த "பிரதோஷ நேர வழிபாடு” சிறப்பு வாய்ந்தது தான். 

செல்வ செழிப்புடன் வாழ செவ்வாய் பிரதோஷம்!  வழிபடும் முறை!

இந்த பிரதோஷங்கள் எந்தெந்த கிழமைகளில் வருகிறதோ அந்த கிழமைகளுக்குரிய நவக்கிரக நாயகர்களின் அருளும் அன்றைய தினத்தில் நமக்கு கிடைக்கிறது. வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷம் "வியாழப்பிரதோஷம்" எனப்படுகிறது. இக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் சிவ பெருமானை கோவிலுக்கு சென்று வணங்குவதால் நவக்கிரகங்களில் முழு சுபகிரகமான "குரு பகவானின்" அருளும் சேர்த்து கிடைக்கப் பெறலாம் என்பது ஐதிகம். 

பிரதோஷம்
வியாழன் பிரதோஷங்கள் வருகிற போது ஜாதகத்தில் குரு பகவானின் கோட்சாரம் சரியில்லாதவர்க, குரு திசை நடப்பவர்கள்,  குரு பகவான் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் இன்றைய தினம் பிரதோஷ வழிபாடு செய்திட வாழ்வில் மேன்மையான இடத்தை அடையலாம்.  

பிரதோஷ நேரமான மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள்ளாக சிவன் கோவிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதிகளில், மஞ்சள் நிறப்பூக்களை வைத்து, 27 வெள்ளை கொண்டைக்கடலைகளை நிவேதனம் செய்து  வணங்க வேண்டும். நந்தி பகவான் சிவபெருமான் அம்பிகை மற்றும் தட்சிணாமூர்த்தியை வணங்கிட  பொருளாதார பிரச்சனைகள், திருமண தடை, புத்திர பேறு என அனைத்து தடைகளும் விலகி வாழ்வில் வளம் பெறலாம். அவன் தாள் பணிவோம். அவன் அருள் பெறுவோம்.  ஓம் நமசிவாய!

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web